ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு 6
மாதங்களுக்குப் பிறகுதான் நோய்க்கான அறிகுறிகளே தென்படும் என டாக்டர்
பாசுமணி தெரிவித்தார்.
சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற ஹெபடைட்டிஸ் சி வைரஸ் குறித்த கருத்தரங்கில் மருத்துவர் பாசுமணி
பேசியது:
ஹெபடைட்டிஸ் சி வைரஸ் ரத்தத்தின் மூலமும், பால்வினை தொடர்பு மூலமும்
உடலில் நுழைகிறது. இது கல்லீரல், கணையம் ஆகியவற்றைப் பாதிக்கும்.
ரத்தம் ஏற்றும்போதும்,அறுவை சிகிச்சையின்போதும் இந்த வைரஸ் பரவ
வாய்ப்புள்ளது. இந்த நோயைக் கண்டறிவதில் உள்ள பிரச்னை என்னவெனில் 80
சதவீதத்தினருக்கு நோய் அறிகுறிகளே தெரியாது.
எனவே, ஏதாவது சந்தேகத்தின் அடிப்படையில் சில பரிசோதனைகளை மருத்துவர்கள்
மேற்கொள்ளும்போது மட்டுமே இந்த வைரஸ் குறித்து தெரியவருகிறது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...