மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப்
பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO)
திட்டமிட்டு வருதிறது.
தற்போது இதன் அளவு 100 சவீதமாக உள்ளது
குறிப்பிடத்தக்கது. பி.எஃ பணத்தை மக்கள் சரியான காரணத்திற்காகப் பயன்படுத்த
தவறுவதால் திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைத்து மீதமுள்ள
தொகையைப் பணியாளரின் ஒய்விற்குப் பின் பென்ஷன் முறையில் அளிக்க முடிவு
செய்துள்ளது EPFO அமைப்பு.
தற்போது உள்ள முறையின் படி ஊழியர்களுக்கு வேலை பறிபோனால் இரண்டு
மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம் திருமணச் செலவுகள்
போன்ற காரணங்களுக்காகப் பி.எஃ பணத்தில் 100% எடுத்துக்கொள்ளலாம்.
75% மட்டுமே
ஆனால் ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் ஆய்வுகளின் படி ஊழியர்கள் மேற்கொண்ட
காரணங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் பிறவற்றிக்குச் செலவு
செய்வதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கவே இத்தகை முடிவுகளுக்கு மத்திய
அரசிடம் இவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது. காலப்போக்கில் இதன் அளவு 50
சதவீதம் வரையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருத்து நிலவுகிறது.
1.30 கோடி
ஒவ்வொரு வருடமும் EPFO அமைப்பு சுமார் 1.30 கோடி ரூபாய் அளவிலான தொகையை
ஊழியர்களுக்குத் திரும்ப அளிக்கிறது (Withdrwal). இதல் 65 லட்சம் ரூபாய்
100 சதவீதம் முழுமையாகத் திரும்பப் பெறுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து EPFO அமைப்பின் தலைவர் கேகே ஜலன் கூறுகையில், ஊழியர்கள் பி.எப்
கணக்கை ஒரு சேமிப்பு கணக்காக மட்டுமே நினைக்கின்றனர். இதனைக் களைந்து 25
சதவீத பி.எப் தொகை அவர்களின் ஒய்வுதிய காலத்தில் பயன்படும் வகையில்
அமைக்கவே இப்புதிய மாற்றத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுகிறோம் என அவர்
தெரிவித்தார்.
அறிவிப்பு
பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக்
குறைக்கும் பரிந்துரையை மத்திய அரசிடம் உள்ளது, கூடிய விரைவில் இதற்கான
முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
Yaar appan veetu panam?
ReplyDelete