கோவையில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் வைத்து
செல்போன்களில் ஆபாசப்படம் பார்த்த 7 மாணவிகள் ஒரு வாரம் சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள சாய்பாபா காலனியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான
மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் 7ம் வகுப்பு
படிக்கும் 7 மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்பில் ஆசிரியை பாடம்
நடித்துகையில் புத்தகத்திற்குள் செல்போன்களை மறைத்து வைத்து ஆபாச படம்
பார்த்துள்ளனர்.
மாணவிகள் பாடத்தை கவனிக்காததை பார்த்த ஆசிரியை அவர்களை கண்டித்தும்
அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அவர்களை எழுந்து வருமாறு ஆசிரியை
கூறியபோது அவர்கள் செல்போன்களுடன் வந்தனர். செல்போன்களை பறிமுதல் செய்த
ஆசிரியை அவற்றை தலைமை ஆசிரியையிடம் அளிப்பதாக மாணவிகளிடம்
தெரிவித்துள்ளார்.
முதலில் செல்போனை திருப்பிக் கொடுக்குமாறு கெஞ்சிய மாணவிகள் பின்னர்
ஆசிரியையை மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஆசிரியை பக்கத்து வகுப்பு
ஆசிரியையிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். அவர் வந்து செல்போன்களை
பார்த்தபோது அதில் ஆபாச படம் இருந்ததை கண்டுபிடித்தார்.
உடனே செல்போன்கள் தலைமை ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இந்த
சம்பவம் குறித்து பள்ளி தாளாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாளாளர்
மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பில் நடந்ததை
தெரிவித்துள்ளார். மேலும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அவர் மாணவிகளின்
பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவிகளிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டதுடன் அவர்கள் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...