Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

         இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

           தமிழக மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என, புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதி மன்றம், பள்ளிகளில் காலி இட விவரத்தை, இணையதளத்தில் அறிவிக்க, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம், முதல் கட்ட காலியிடப் பட்டியல் வெளியானது. இரண்டாம் கட்ட பட்டியல், http://tnmatricschools.com/ இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியானது.
'இந்த இடங்களில், தமிழக அரசின் இலவச மாணவர் சேர்க்கைச் சட்டத்தின் கீழ், மாணவர்களைச் சேர்க்க, அந்தந்த பள்ளிகளை அணுகலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும், இலவச மாணவர் சேர்க்கை மாநில முதன்மை தொடர்பு அலுவலருமான பிச்சை தெரிவித்து உள்ளார்.
ஆனால், இந்த காலியிடங்களில் சேர மாணவர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது.
மெட்ரிக் இயக்குனரகம் உரிய முறையில் அறிவிப்பு செய்து, முன்கூட்டியே இத்திட்டத்தைத் துவங்காததே காரணம் என, கூறப்படுகிறது.

பள்ளி (எண்ணிக்கை),ஒதுக்கப்பட்ட இடங்கள்,நிரம்பியஇடங்கள்,காலிஇடங்கள்
நர்சரி           (5,314) 55,605 26,466 29,139
மெட்ரிக் (3,673) 61,875 39,329 22,546
மொத்தம் 51,685

அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், டிசம்பர் முதல் மார்ச்சுக்குள் மாணவர் சேர்க்கையைத் துவங்கி விட்டனர். இலவச மாணவர் சேர்க்கைத் திட்டம், ஜூனில் தான் துவங்கியது. அதனால், மாணவர்களில் பெரும்பாலானோர் நன்கொடை கொடுத்தும், அதிகக் கட்டணம் கட்டியும் சேர்ந்து விட்டனர். எனவே, இலவசமாகச் சேர மாணவர்கள் இல்லை.
பெற்றோர்

தற்போது வீடு, வீடாக இலவச மாணவர் சேர்க்கைக்கான பிரசாரம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரில் சிலரை, தனியார் பள்ளி காலியிடங்களில் சேர்க்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive