அரசு மற்றும் தனியார் துறையில் முடிவு
எடுக்கும் அனைத்து குழுக் களிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நிலைக் குழு பரிந்துரை
செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான
வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், பெண்களுக்காக தேசிய அளவில் ஒரு கொள்கையை
உருவாக்கவும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மகளிர்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் உயர்நிலைக் குழு
அமைக்கப்பட்டது.
பஞ்சாப் பல்கலைகழக பேராசிரியர் முனைவர் பாம்
ராஜ்புத் தலைமையில் 13 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவிடம், கடந்த 1989 முதல்
நாடு முழுவதும் அனைத்து மதம் மற்றும் சமூகப் பிரிவில், பெண்களின் நிலை
குறித்து ஆராயும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த
மாதம் சமர்ப்பித்தது. இதில், நாடு முழுவதும் அரசு, நீதித்துறை, தனியார்
மற்றும் பொதுநல அமைப்புகளில் முடிவு எடுக்கும் குழுவில் பெண்களுக்கு 50
சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளை
அளித்துள்ளது.
இந்து திருமண சட்டம்
“நாடு முழுவதும் மணமான பெண்களை கணவன்மார்கள்
தங்கள் ஏகபோக சொத்தாக கருதும் மனப்பான்மை மாறவேண்டும். இந்து திருமண
சட்டத்தில் உள்ள ‘பெண்களின் கொடுமை’ என்ற வார்த்தையை மறுஆய்வு செய்ய
வேண்டும். ஏனெனில், பழங்காலத் தில் பெண்களின் நடத்தையை வைத்து ஆணாதிக்க
சமுதாயத் தால் இது உருவாக்கப்பட்டது. மணமாகி பிரிந்த மற்றும் விவா கரத்து
பெற்ற பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கட்டாய ஜீவனாம்சம் மற்றும்
உதவித்தொகை பெற சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். இந்து பெண்களுக்கான
உரிமைகள் சட்டத்தில் அவர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கவேண்டும்” என்று
அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
விவாகரத்துப் பிரச்சினை
கிறிஸ்தவ திருமண சட்டத்திலும் மாற்றங்கள் செய்ய
இக்குழு கோரி யுள்ளது. குறிப்பாக “இருவரின் ஒப்புதலுடன் அளிக்கப்படும்
விவாகரத்துக்கான குறைந்தபட்ச காலக்கெடுவை 2 ஆண்டில் இருந்து ஓர் ஆண்டாக
குறைக்க வேண்டும்” என்று தெரிவித் துள்ளது.
பாலியல் பலாத்காரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மனைவி யின் ஒப்புதல் இல்லாதது குறித்தும் இக்குழு மாற்றங்களைக் கோரியுள்ளது.
“பலாத்கார குற்றங் களில் வயது மற்றும்
உறவுகளின் அடிப்படையில் விதிவிலக்கு அளிப்பதை நீக்கவேண்டும். சமீப காலமாக
நாடு முழுவதும் பரவி விட்ட கவுரவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற
வேண்டும்” எனவும் பரிந்துரை செய்துள்ளது.
“பெண்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்
வகையில், தேசிய அமைப்புகள் செயல்படும் முறை யில் மாற்றம் கொண்டு வர வேண்
டும், இதற்கு உதாரணமாக அமையும் வகையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்
நியமன முறையில் வெளிப் படைத்தன்மை வேண்டும், பெண்களின் முன்னேற்றத்தில்
சமூகநலத் துறை அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றும் பரிந்துரை
செய்துள்ளது.
“பொருளாதரம் மற்றும் சமூக ரீதியாகப் பின்
தங்கியுள்ள பெண்களும் பத்திரிகைகளின் அனைத்து நிலைப் பணிகளிலும்
அமர்த்தப்பட வேண்டும், பெண் பத்திரிகையாளர்களின் சாதனைகளை அங்கீகரிக்து
பாராட்டும் வகையில் அவர்களுக்கு தனியாக விருதுகள் அறிவிக்க வேண்டும்”
எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...