தமிழகத்தில், 8 ஆண்டுகளில், 4,667 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், 3,610 பேர் பெண் குழந்தைகள்.தமிழகத்தின், சில மாவட்டங்களில்,
பெண் சிசுக்கொலைகள் அதிகம் நடந்தன.
இதைத் தடுக்கவும், தவறான வழியில் பிறந்த
குழந்தைகள்; வளர்க்க முடியாமல் தனித்து விடப்படும் குழந்தைகள் போன்ற வற்றை
பாதுகாக்கவும், தமிழக அரசு, தொட்டில் குழந்தை திட்டம்; சிறப்பு
காப்பகங்களையும் செயல்படுத்தி வருகிறது.இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளை,
சட்டரீதியாக தத்தெடுக்க, அரசு வழி வகை செய்துள்ளது. இதன்படி,
கடந்த, 8 ஆண்டுகளில், 4,667 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன. இதில்,
3,610 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.உள் நாட்டைச்
சேர்ந்தவர்களுக்கு, 4,294; வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு,373
குழந்தைகளும் தத்துக் கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்காக, அரசு
அங்கீகாரம்பெற்ற, 17 தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விதிமுறைகள் என்ன?:
* தம்பதியின், வயது கூட்டுத் தொகை, 90க்குள் இருந்தால், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கலாம்.
*வயது கூட்டுத்தொகை, 91 என்றால், ஒரு வயது குழந்தை; 92 எனில், இரண்டு வயது குழந்தையையும் தத்து எடுக்கலாம். கூட்டுத் தொகை, 100ஐ தாண்டினால் தத்தெடுக்க முடியாது.
*ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால், அக்குழந்தையின் சம்மதம் முக்கியம்.
தனியாக உள்ள பெண்களும் தத்தெடுக்கலாம்; குழந்தைக்கும், பெண்ணிற்கும் இடையே, 21 வயதுவித்தியாசம் அவசியம்.*தத்தெடுக்க, மாவட்ட சமூக நலஅலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பாசம் அதிகம். அதனால், குழந்தைகள் தத்தெடுப்பில், பெண் குழந்தைகளே முதல் தேர்வாக உள்ளது. வீட்டு வேலைக்காக பெண் குழந்தைகள் தேர்வு என்பது தவறான தகவல். தத்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல; விதிமுறைகள் கடினம்சல்மாசமூகநல வாரிய முன்னாள் தலைவர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...