மத்திய
அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் சேரும் வகையில்
நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமான "உதான்' திட்டத்தின்
கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசித் தேதியாகும்.
மேல்நிலைப்
பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவிகள் மத்திய அரசின்
உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., க்களில் சேருவதற்கான பயிற்சியை
அளிக்கும் வகையில் "உதான்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து
நடைமுறைப்படுத்தி வருகிறது.இந்தத்
திட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மட்டுமல்லாமல், அனைத்து மாநில
அரசுப் பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் 1,000 பேர் தேர்வு
செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
ஆன்-லைன் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், "டேப்லெட்' ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த "ஹெல்ப் லைன்' வசதியும் ஏற்படுத்தப்படும்.ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) விண்ணப்பிப்பது முதல் தேர்வு எழுதுவது வரை வழிகாட்டுதல் அளிக்கப்படும்.
தகுதி: இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, கணிதம், அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.மேலும் பிளஸ் 1 வகுப்பில் கணித, அறிவியல் பிரிவில் படித்து வரவேண்டும்.மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...