செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு புதன்கிழமை முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 9 மாவட்ட தலைமை
மருத்துவமனைகளில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர,
தமிழக அரசின் www.tn.gov.in, www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் இருந்து
விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின
மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை
இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 3,566 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற முகவரியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...