நிதியாண்டு
2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட்
31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
"சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர்
என தணிக்கைக்கு உட்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தணிக்கைக்கு உட்பட்டு வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வோர் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
எளிய படிவம்: மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர் பயன்படுத்த இந்த ஆண்டு "ஐடிஆர்-2ஏ' என்ற எளிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்:-
1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர்;
2. வருமான வரிப் பிடித்தத் தொகையைத் திரும்பப் பெறக் கோருவோர்;
3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.
அலுவலக எல்லையை தெரிந்துகொள்ள...
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை "www.tnincometax.gov.in" என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
I am working as BT Asst. (Maths) in Department of Elementary Education’s Panchayat Union Middle School in MADURAI district near Madurai City. Those who willing for Mutual Transfer from TRICHY district to MADURAI district can contact my Mobile 8220631143. (VIRALIMALAI AND ANNAVASAL BLOCKS OF PUDUKOTTAI DT. CAN ALSO CONTACT).
ReplyDeleteI am working as BT Asst. (TAMIL) In Perapatti High School VIRUDHUNAGAR district near SATTUR & SIVAKASI City. Those who are willing mutual transfer from TRICHY to VIRUDHUNAGAR DT contact my Mobile 8870566200
ReplyDeleteI am working as BT Asst. (TAMIL) In Perapatti High School VIRUDHUNAGAR district near SATTUR & SIVAKASI City. Those who are willing mutual transfer from TRICHY to VIRUDHUNAGAR DT contact my Mobile 8870566200
ReplyDelete