விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அங்கீகாரமின்றி இயங்கும் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை மூட வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மோசஸ் தலைமை
வகித்தார். பொதுச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்றனர்.
மோசஸ் கூறியதாவது: கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
துவங்கியது. ஏற்கனவே ஓராண்டு பணியில் உள்ள ஆசிரியர்களும் இதில்
பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 3 ஆண்டுகள் பணிபுரிந்து
இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிப்பது வேதனையளிக்கிறது.
அரசியல் தலையீடின்றி ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளாக பல பெற்றோரை ஏமாற்றி, அங்கீகாரமின்றி பலஆயிரம்
சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் இல்லாத மெட்ரிக்
பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்தது 10 மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படும்
எனக்கூறி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி
3,500 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகமானது. ஆனால் பெரும்பாலான
பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியையும் பிறஆசிரியர்களே கற்பிக்கின்றனர். எனவே,
ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...