மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட
கவுன்சிலிங், இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்கிறது.எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், கடந்த மாதம் நடந்தது.
2,939 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்; 135 மாணவர்கள்
சேரவில்லை.இதனால், அரசுக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஆறு
இடங்கள், 20 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கின்றன. சுயநிதிக்
கல்லுாரிகளில், 109 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கும், சுயநிதிக்
கல்லுாரிகளில், 927 பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், இரண்டாம்
கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்
இன்று நடக்கிறது. இதற்கு, 2,600 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே,
கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடமாறிக் கொள்வதற்கான கவுன்சிலிங் முதலில்
நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...