சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி கூட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளியிலேயே மது அருந்திய விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு
சுமார் 2500 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.  இந்த பள்ளியில் பிளஸ் 2 முதல்
குரூப் எடுத்து படிக்கும் 3 மாணவர்கள் நேற்று மதிய இடைவேளையின் போது
வெளியே சென்று மது அருந்தினார்கள். பின்னர் போதையில் வகுப்பறைக்கு
வந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு போதை தலைக்கு ஏறியது. திடீர் என
ஒரு மாணவன் வகுப்பறையில் வாந்தி எடுத்தார்.
இதைப்பார்த்த சக மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் போதையில்
இருப்பதை உணர்ந்த ஆசிரியை அந்த 3 மாணவர்களை தட்டிக் கேட்டனர். ஆனால் 3 மாண
வர்களும் போதையில் ஆசிரியையிடம் ரகளை செய்தனர். மாணவர்களின் செயல்
அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. வகுப்பறையில் மாணவிகளும் இருந்ததால்
உடனே ஆசிரியை தலைமை ஆசிரியையை சந்தித்து புகார் அளித்தார். பள்ளி தலைமை
ஆசிரியை பரிமளா வந்து போதை மாணவர்களை தட்டிக் கேட்டும் அவர்கள்
அடங்கவில்லை.இதனால் அவர் போலீசில் புகார் செய்தார். சங்கர்நகர் போலீசார்
வந்து ரகளை செய்த 3 மாணவர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மாணவர்களின் பெற்றோர்களை வர வழைத்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி
வைத்தனர். 3 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது இன்று முடிவு
செய் யப்படும் எனத் தெரிகிறது. மாணவர்களின் பெற்றோர் களை இன்றும் அழைத்து
பேசபோலீசார் முடிவு செய்து உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...