சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை ஜூலை 29-ஆம்
தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளைச்
சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம்
பெறுவதில் உள்ள குறைகளைத் தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்
வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெற உள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்கள், ஓய்வூதியம்
தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்,
ஓய்வு பெற்றபோது பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகம் (முழு முகவரியுடன்),
ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண், கோரிக்கை விவரம் (சுருக்கமாக),
கோரிக்கை நிலுவையிலுள்ள அலுவலகம் (முகவரியுடன்) ஆகிய தகவல்களை இரண்டு
பிரதிகளில் "மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சிங்காரவேலர் மாளிகை, 62, ராஜாஜி சாலை, சென்னை-1' என்ற முகவரிக்கு வரும்
ஜூலை 29-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனத்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...