Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.இந்த நிலையில்,
ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நிறைவடைகிறது.
கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:
மேல்நிலைப்பள்ளி
*ஜூலை 29 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பணி மாறுதல்.

*ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 3 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.
*ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்).
*ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).
*ஆகஸ்ட் 10 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்).
*ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசைஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்).
*ஆகஸ்ட் 17, 18 (திங்கள், செவ்வாய்) - பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்.
இவ்வாறு கண்ணப்பன் கூறியுள்ளார்.





11 Comments:

  1. WHAT ABOUT B.T. COUNSELING ???????????????????????????????????????

    ReplyDelete
  2. I think Bt only deployment counselling

    ReplyDelete
  3. Any body clear .... BT counseling .....yes r not......after dploymnt. Vacant irukuma......

    ReplyDelete
  4. I am Dhanalaskhmi working as a SG teacher in mangalore block at cuddalore dt. I want mutual transfer from Nagapattinam (or) Thiruvarur (or) thanjavur please contact 9884868976

    ReplyDelete
  5. I am working as BT Asst. (Maths) in Department of Elementary Education’s Panchayat Union Middle School in MADURAI district near Madurai City. Those who willing for Mutual Transfer from TRICHY district to MADURAI district can contact my Mobile 8220631143. (VIRALIMALAI AND ANNAVASAL BLOCKS OF PUDUKOTTAI DT. CAN ALSO CONTACT).

    ReplyDelete
  6. I am working as BT Asst. (TAMIL) In Perapatti High School VIRUDHUNAGAR district near SATTUR & SIVAKASI City. Those who are willing mutual transfer from TRICHY to VIRUDHUNAGAR DT contact my Mobile 8870566200

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive