பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினத்தை கொண்டாட, அரசுதமிழக பள்ளிகளில், காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை மட்டும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கவிதை ஆகிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.இத்தினத்தை கொண்டாட, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 500 ரூபாயும் உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு, 250 ரூபாயும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில், பெற்றோர்
ஆசிரியர் கழக
அமைப்பின் நிதி
பற்றாக்குறையில் உள்ளது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தவும்,
கலை நிகழ்ச்சிகள்
நடத்தவும் உத்தரவு
பிறப்பித்து விட்டு, சொற்பான நிதியை ஒதுக்குவது
ஏற்புடையதல்ல. அதிலும், மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரையில், போட்டிகள் மாணவர்களின் வயதின்
அடிப்படையில் நான்கு அல்லது ஐந்து பிரிவுகளாக
நடத்தப்படுகிறது.
இன்றைய பொருளாதார சூழலில்,
சாதாரண புத்தகத்தை
வாங்கினாலும் அனைவருக்கும் பரிசுகள் தர, 250 ரூபாய்
போதாது. சில
பள்ளிகளில், பரிசுகள் வழங்காமல் பெயரளவிலும், சில
பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து
தனது சொந்த
காசை செலவழித்தும்
நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்
ஒருவர் கூறுகையில்,
'பள்ளிகளில், 200 முதல் 1500 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.
500, 800, 1200, 1500 என, மாணவர்கள் எண்ணிக்கையை
கொண்ட பள்ளிகளில்,
250 ரூபாயால் ஒரு நிகழ்ச்சியை நடத்த எவ்வாறு
போதும். எந்த
நிகழ்ச்சியை நடத்த கூறினாலும், பெற்றோர் ஆசிரியர்
கழக நிதியிலிருந்து
பயன்படுத்த கூறுகின்றனர். போதிய நிதி இல்லாமல்
பரிசுகள் வழங்கி
ஊக்குவிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவது
சரியல்ல' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...