'டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், 22ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டாண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,400 இடங்களுக்கு மேல் உள்ளன. இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 22ம் தேதி துவங்குகிறது. அரசு மருத்துவக் கல்லுாரி கள் உட்பட, 27 இடங்களில், ஆக., 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும், ஆக., 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...