கர்நாடகத்தில் அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடகத்தில் உள்ள அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும். கர்நாடக கல்வித் துறை சேவை விதிகள் 2014-இன்படி, இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் பாட வாரியாக http:kea.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆக.5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.இதற்குரிய கட்டணத்தை ஆக.6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்தப் பதவிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YENYA KARNATAKA POSTINGA INKA YENYA SOLRA
ReplyDelete