பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின்
பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக
வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8
உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம்,
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக்
கழகங்களை பட்டியலிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் படி மத்திய/மாநில/மாகாண சட்டம்
அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி பல்கலைக் கழகமாக
அங்கீகரிக்கப்பட்டவையே முறையான பல்கலைக் கழகங்கள்.
எனவே விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கல் தங்களை
சட்டப்பிரிவு 23-ன் படி பல்கலைக் கழகம் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது.
டெல்லியில், வரன்சேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா கமர்ஷியல் யுனிவர்சிட்டி,
யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வோகேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் செண்ட்ரல்
ஜுரிடிகல் யுனிவர்சிட்டி உள்ளிட்ட 6 போலி பல்கலைக் கழகங்கள்
பட்டியலிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...