Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில் சந்தித்த விளைவு ஏற்படும்: அலுவலர் சங்கம் எச்சரிக்கை

        “அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடந்த 2003ல் சந்தித்த விளைவை தான் அ.தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்,” என சிவகங்கையில் ஊரகவளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் என்.சேகர் பேசினார்.

         அவர் பேசியதாவது: அரசுத்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்தபோது பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு சில சலுகையை மட்டும் வழங்கியது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலமுறை சம்பளம் போன்ற பொது கோரிக்கையை இது வரை நிறைவேற்றவில்லை. சில அமைச்சர்கள், அதிகாரிகள் பணியிட மாறுதல், பணி நியமனத்தில் கடும் வசூலில் ஈடுபடுகின்றனர்.நடப்பு ஆண்டு 15 லட்சம் கழிப்பறைகள் கட்டுமாறு அரசு நிர்பந்திக்கிறது.அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழு மாற்றம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், ஜூலை 10ம் தேதி வெளியான அரசு ஆணை எண்:200 நிதித்துறை செயலரின் உத்தரவில் 8வது ஊதியக்குழு பரிந்துரை வரும் வரை எவ்வித கோரிக்கையையும் அரசிடம் வைக்க கூடாது என கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கொளத்துாரில் பேசிய ஜெ.,புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அனைத்து துறை ஊழியரின் கோரிக்கை நிறைவேற்றுவேன் என்றார். இதுவரை நடக்கவில்லை. 2003 ஏப்ரல் 1க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தனர். அரசும் 10 சதவீதம் செலுத்தும் என்றனர். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே?.
அரசு ஊழியருக்கு பென்ஷனாக குறைந்தது ரூ.3,500 தர வேண்டும். செப்டம்பர் 2ல் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் பங்கேற்பர். இக்கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்ட் 22ல் அனைத்து மாவட்டத்திலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். 
         அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்றித்தராவிட்டால், கடந்த 2003 தேர்தலில் சந்தித்த விளைவுகளை தான் இந்த அரசு சந்திக்கும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive