SSTA அரசாணை எண் -- 232. Dt. 10.07.2015 ஆசிரியர் பொது
மாறுதல் கலந்தாய்வு
2015-16 வழிகாட்டி நெறிமுறைகள். வ.எண். 4ல்
ஆசிரியர் ஒரே
பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என உள்ளது அதாவது
ஓர் ஆசிரியர் 01.06.2012 க்கு முன் பணியேற்று
இருந்தால் மட்டுமே
இந்த ்-2015
பொதுமாறுதலில் கலந்து கொள்ள முடியும்.
இது ஆசிரியர்களிடையே அதிர்ப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில் பணி நியமனம், பணி மாறுதலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களைப் விட்டுப்பிரிந்து வெகு தொலைவில் பணியாற்றி வருகின்றனர் . கடந்த ஆண்டுகளில் இந்த கட்டுப்பாடு ஒரு கல்வியாண்டாக இருந்ததது. இந்த அரசாணையால் தகுதி தேர்வு மூலம் பணியேற்றவர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது, இந்த உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்தாய்வு ஏக்கம் கனவாக போய்விடும் ,கடந்த வாரத்தில் 6 வது ஊதியக்குழு குறைகளை இனி கேட்கமாட்டோம் என்ற அரசாணை எண்-200 இந்த வாரத்தில் -232 அரசாணை ஆக மொத்தம் ஊதியமும் வழங்கமாட்டோம், பணிமாறுதலும் தரமாட்டோம் என்று தொடர்ந்து ஆசிரியர்களுக்கு விரோதமான இந்த இரு உத்தரவினை உடனடியாக மாற்றிட வேண்டும் . இதை SSTA வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இதை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும். உணர்வுக்கு குரல் கொடுப்போம்!!! உரிமைக்கு உயிர் கொடுப்போம்!!! வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நம் வாழ்வு ???? ஆசிரியர்களுக்கான SSTA...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...