சென்னையில் ஆசிரியர்கள் நடத்தும் பிரமாண்ட தொடர் முழக்க போராட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க உறுதி அளித்துள்ள நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தரப்பில் இருந்து மட்டும் இதுவரை பதில் வரவில்லை.
இதனால் 'அவர் வருவாரா' என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதரப் பலன்கள், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 1.6.2006ல் அன்று பணிவரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை சம்பளம் வழங்குவது உட்பட 15 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ) சார்பில் ஆக., 1ல் தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது.
இப்போராட்டத்தில் தங்களுக்கு ஆதரவாக பங்கேற்றும், கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கும் அனைத்து கட்சியினருக்கும் ஜாக்டோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.இதற்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், த.மா.கா., தலைவர் வாசன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக பதில் அனுப்பிவிட்டனர்.
காங்., துணைத் தலைவர் ராகுலின் தமிழக வருகையை பொறுத்து போராட்டத்தில் பங்கேற்பது குறித்து தெரிவிப்பதாக அக்கட்சி தலைவர் இளங்கோவனும் பதில் அனுப்பிவிட்டார். ஆனால், தே.மு.தி.க., தரப்பில் மட்டும் இன்னும் ஜாக்டோவிற்கு பதில் வரவில்லை. 'விஜயகாந்த் இப்
போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் அரசின் கவனத்தை ஈர்க்க இப்பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
எங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்பது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளது ஆறுதலாக உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தும் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
எங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்பது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளது ஆறுதலாக உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தும் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
பழிவாங்கும் நடவடிக்கையா :அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறுகையில், "நிர்வாக மாறுதல் வசதி, தற்போது பணியாற்றும் பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் உட்பட பல முரண்பாடான நிபந்தனைகள் இந்தாண்டு கலந்தாய் வில் விதிக்கப்பட்டுள்ளதை எதிர்பார்க்கவில்லை.
இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கை போல் உள்ளது. முரண்பாடான நிபந்தனைகளை கல்வித்துறை அதிகாரிகள் திரும்பப் பெற்று அதன்பின் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...