'ஜாக்டோ' தொடர் முழக்க போராட்டத்திற்கான மாநில ஆயத்த
கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது.மத்திய அரசுக்கு இணையான
சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன. அரசு செவி சாய்க்காததால் 27
சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை
குழுவை (ஜாக்டோ) அமைத்துள்ளன.
இந்த அமைப்பு சார்பில் ஆக., 1ல் சென்னையில் தொடர் முழக்க போராட்டம்
நடக்கிறது. இப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக
அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது. போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டம்
ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது. இதில் 27 சங்கங்களின் நிர்வாகிகள்
பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர்
அமல்ராஜ் கூறுகையில், ''தொடர் முழக்க போராட்டம் மூலம் அரசின் கவனத்தை
ஈர்க்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த போராட்டம் காலை 10 மணி முதல் மாலை
4 மணி வரை நடக்கும். போராட்ட நடவடிக்கை குறித்து திண்டுக்கல்லில் நடக்கும்
ஆயத்த கூட்டத்தில் திட்டமிடப்படும்'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...