உலகிலேயே முதல்
முறையாக விவசாயிகளும் படித்து பட்டம் பெறும் வகையில் வேளாண்மைப் பல்கலைக்
கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இளநிலை பண்ணைத் தொழில் நுட்பப் பட்டப்
படிப்பில் (பி.எப்.டெக்) விவசாயிகள் பட்டம் பெற்றுள்ளனர்.
விழாவுக்கு
ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர்
கு.ரா.ஆனந்தகுமார் வரவேற்றார். மேயர் பா.ராஜ்கு மார் வாழ்த்துரை
வழங்கினார். தொலைத்தூரக் கல்வி மைய இயக்குநர் பி.சாந்தி கூறும்போது,
‘உலகிலேயே முதல் முறையாக வேளாண் பல்கலை யில் அறிமுகமாகியுள்ள இந்த
பட்டப்படிப்பில், 1250 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 155 பேர்
பட்டதாரிகளாக தகுதிச் சான்றிதழ் பெற்றுள் ளனர். விவசாயிகளை தொழில்
முனைவோர்களாகவும், பட்டம் பெற்றவர்களாகவும் முன்னேற்ற மடையச் செய்வதே இதன்
நோக்கம். 6 பருவங்கள், 120 நேர்முகப் பயிற்சிகள் என 3 ஆண்டு பாடத்திட்டமாக
இது உள்ளது. எளியமுறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...