Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது

        10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? என்று கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கருத்து கேட்கிறது.

புதிய கல்வி கொள்கை

டெல்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் கல்வியில் புதிய கொள்கைகளை அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட வாரியாக, மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.


இந்த கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை சேர்ந்த அதிகாரிகள் கருத்து கேட்கின்றனர் இந்த கருத்து கேட்பு சில மாநிலங்களில் முடிவடைந்துவிட்டது. 

கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாட்டில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மதுரை மண்டலம், கோவை மண்டலம், சென்னை மண்டலம் என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மண்டலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கும். அதுபோல கோவை மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் இருக்கின்றன.

தொடக்க கல்வி, இடைநிலை கல்வி, தொழில் கல்வியை வலுப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்கப்படுகிறது. மேலும் தேர்வு முறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், ஆசிரியர் கல்வியை புனரமைப்பது, தரமான ஆசிரியர்களை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறப்படுகிறது.

கருத்துகளாக கேட்கப்பட உள்ள பொருள்கள் வருமாறு:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா?

* கல்வி உரிமைச்சட்டபடி 8-ம் வகுப்பு வரையில் பொதுத்தேர்வு நடத்தப்படுவது இல்லை. 10-ம் வகுப்பு வரை இது நீடிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களா? தேர்வு நடத்தப்பட வேண்டாம் என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

*தற்போதைய தொடக் கக்கல்வி மாணவர்களை இடைநிலைக்கல்விக்கு தயார் செய்வது என்ற இலக்கை எந்த அளவுக்கு நிறைவு செய்வதாக உள்ளது?

* இடைநிலைக்கல்வி வரையில் கட்டாயக் கல்வித்திட்டம் உள்ளது. தற்போது இடைநிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்விக்கு தேவை அதிகரித்துள்ளது. இடைநிலை அல்லது மேல்நிலை வரை கட்டாயக் கல்வி திட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமா? ஏன்?

* மாநிலங்களுக்கு இடையே சமச்சீரான பாடத்திட்டம் தேவை எனக் கருதுகிறீர்களா? ஆம் எனில் ஏன்? எந்த நிலை வரை?

* ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் யாவை?

* நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதில் உள்ள தடைகள், சிக்கல்கள் யாவை?

* நமது அரசியல் சாசனம் எல்லாக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை அவர்களது தாய்மொழியில் அளிக்க வேண்டும் என்கிறது. ஆனாலும் நம்மால் இன்னமும் குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வியை கற்பிக்க முடியவில்லை. அவர்களுக்கு தாய்மொழியில் கல்வியை அளித்திட நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை?

இவ்வாறு பல கேள்விகளை விடுத்து கூட்டத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் டெல்லிக்கு அனுப்பப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து வரும் கருத்துக்கு ஏற்ப புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு வகுத்து அமல்படுத்தும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive