பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற
மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்
வழங்கப்படுகின்றன. கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில், முதலிடம்
பிடித்த, 21 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த வாரம் ரொக்கப் பரிசு
மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மீதமுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் தேதி ரொக்கப் பரிசு
மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இதில், பள்ளிக் கல்வி, ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலன், நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளின் அமைச்சர்கள்
பங்கேற்று, தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாநில
ரேங்க் பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...