வேலைக்கு தயார்படுத்தும் வகை யில் 10 ஆயிரம் பொறியியல் மாண வர்களுக்கு
திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை உயர்கல்வித்துறை
அமைச்சர் பி.பழனியப்பன் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.
பொறியியல் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு உகந்தவர் களாக மாற்றும் வகையில் ‘நாஸ் காம்’ (தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்புடன் இணைந்து திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம்முடிவு செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட் டத்தை உயர்கல்வித்துறை அமைச் சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ‘நாஸ்காம்’ தலைவர் பி.வி.ஆர்.மோகன் ரெட்டி, பேசும்போது, ‘‘புதிதாக பணி யில் சேருவோரின் திறனை மேம்படுத்துவதுடன் ஏற்கெனவே பணியாற்றும் ஊழியர்களின் திறமையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. தற்போது தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
தொழில்நுட்பம், திறமை, வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இந்த பயிற்சியில் இடம்பெறும்’’ என்றார்.‘காக்னிசன்ட்’ துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் பேசும்போது, ‘‘பொறியியல் பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக ஐசிடி அகாடமி ஆய்வு தெரிவிக்கிறது.மேற்கத்திய நாடுகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர் களை தொழில் தொடங்க ஊக்குவிப்பார்கள். தேவையான உதவிகளையும் செய்வார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லை’’ என்றார்.‘நாஸ்காம்’ துணைத் தலைவர் சந்தியா சின்டலா, இஆர் அண்ட் டி கவுன்சில் தலைவர் சமீர் யாஜ்னிக் ஆகியோரும் பேசினர். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் மேம்பாட்டு மைய இயக்குநர் டி.மோகன் வரவேற்றார். நிறைவாக பேராசிரியர் டிவி.கோபால் நன்றி கூறினார்.
முதலில் ஆசிரியர்களுக்கு..
புதிய பயிற்சி திட்டம் குறித்து பேராசிரியர் மோகன் கூறும்போது, “முதல்கட்டமாக 90 பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் மூலமாக இதர ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். பொறியியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். படித்து முடிக்கும் மாணவர்களை வேலைக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சி அமைந்திருக்கும்” என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...