தமிழகத்தில், பி.இ., - பி.டெக்.,
படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்,
ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட,
530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு
களுக்கான பொது கவுன்சிலிங், நாளை முடிகிறது.
மொத்தமுள்ள, 2 லட்சத்து, 5,000 இடங்களில், நேற்று வரை, 94 ஆயிரம் இடங்கள் நிரம்பின.தொழிற்கல்வி
மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. அது
முடிந்து, காலியாக இருக்கும் இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்,
ஆகஸ்ட், 1ல் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 துணைத் தேர்வில், வெற்றி பெற்ற
தமிழக மாணவர்கள், இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். அனைத்து
சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க
வேண்டும். இதற்கான விவரங்களை,
'https://tnea.annauniv.edu/tnea2015/press.php' என்ற, அண்ணா பல்கலைக் கழக
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...