அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி
நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை
செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
* புள்ளியியல்
துறை ஆய்வாளர் பணிக்கு காலியாக உள்ள, ஆறு பணியிடங்களை நிரப்ப, 2014ல்
நடந்த தேர்வில், 18 பேர் தேர்வாகினர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு
நடக்கிறது.
* அரசு
அச்சக உதவி மேலாளர் (பணிகள்) பதவிக்கு, எட்டு காலியிடங்களை நிரப்ப, கடந்த
நவம்பரில் நடந்த தேர்வில், 22 பேர் தேர்வாகினர்; நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு முடிவு விவரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...