இன்று காலை பல நண்பர்களது ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து ஒரு ஆபாச வீடியோ
ஒன்று இன்பாக்ஸில் வந்தது. என்ன என்று பார்ப்பதற்குள் என் கணக்கிலிருந்து
பலருக்கு அந்த செய்தி பரவிவிட்டது. பின்னர்தான் தெரிந்தது அது வைரஸ் செய்தி
எனும் ஸ்பாம். இதேபோல் பலருக்கும் உண்டான அனுபவம் ஸ்டேட்டஸில்
வெளிப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் நமது ப்ரைவஸி அமைப்பு சரியாக இல்லாதது தான்.முன்பு
எப்போதோ ஒரு ஆப்ஸுக்கு நம் தகவல்களை பயன்படுத்தி கொள்ளலாம் என நாம் வழங்கிய
அனுமதிகூட இந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம்.இன்றைய சமூக வலைதள உலகில்
ப்ரைவஸி என்பது கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக
நமது தகவல்களை பிறர் தெரிந்து கொள்வது துவங்கி ஒருவரது புகைப்படத்தை முகம்
தெரியாத நபர் எடுத்து கொள்வது வரை அனைத்துமே இன்றைய சமூக வலைதளங்களில்
எளிதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அனைவரும் தகவல்களை ப்ரைவஸியாக வைத்திருப்பது அவசியமாகிறது. குறிப்பாக பெண்கள் தங்கள் தகவல் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தாமலோ அல்லது பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதும் இன்றைய நிலையில் அவசியமாகிறது. ஃபேஸ்புக்கும் இதற்கேற்ப ப்ரைவஸி தகவல்களை பாதுகாக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஃபேஸ்புக்கில் நமது ப்ரைவஸியான விஷயங்களை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
பாதுகாப்பது எப்படி?
1.பலருக்கு ஃபேஸ்புக் அமைப்பில் தங்களது புகைப்படத்தை மாற்றுவது மற்றும்
தங்களை பற்றிய விவரங்களை மாற்றுவது மட்டுமே தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை
தாண்டி ஃபேஸ்புக்கில் ப்ரைவஸி செட்டிங் என்றை அமைப்பு உள்ளது அதில்
இருக்கும் விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை. அதில்...
1.நம் தகவல்களை யார் பார்க்க வேண்டும்?
2.நம்மை யார் தொடர்பு கொள்ள வேண்டும்?
3.நம்மை தொந்தரவு செய்பவரை எப்படி தவிர்ப்பது?
இந்த மூன்று கேள்விகளும் இடம் பெற்றிருக்கும். இதனை ஒவ்வொன்றாக பார்த்தால்
நம் தகவல்களை நமது நண்பர்கள் பார்க்கலாம்,நண்பர்களது நண்பர்கள்
பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம் என்பது போன்ற அமைப்புகள்
தரப்பட்டிருக்கும். இதனை சரியாக அமைத்தாலே பாதி பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அதற்கு முன்பு சமூக வலை தளங்களில் முகம் தெரியாதவர்களோடு அதிகம் நெருங்கி
பழகாமல் இருப்பதும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
நம்மை யாராவது தொடர்பு கொள்ள வேண்டும் எனில் நம்மிடம் அனுமதி கேட்க
வேண்டும் என்ற அமைப்பையும் ஃபேஸ்புக் வைத்துள்ளது அதற்கு நாம் செய்ய
வேண்டியது நமது விவரங்களை நமக்கு மட்டும் தெரியும் 'ஒன்லி மீ' அல்லது
''ஃப்ரெண்ட்ஸ் ஒன்லி' அமைப்பாக வைத்திருப்பதன் மூலம் நம் தகவல்கள்
தேவையில்லாத நபர்களுக்கு பகிரப்படுவதை தவிர்க்கலாம்.
சமூக வலைதளங்களில் சிலர் அடிக்கடி தொந்தரவு தரும் செய்திகளையோ அல்லது
தனிப்பட்ட முறையில் நமக்கு தொந்தரவுகளையும் தர முடியும். அவர்களை ப்ளக்
செய்யும் வசதியையும், அவர்களுக்கு நம் கணக்கு கண்களுக்கு தெரியாமல்
செய்யவும் செய்ய முடியும்
.
இது ஒரு புறம் என்றால் தன்னை பிரபலபடுத்தி கொள்ளவும், அதிக லைக்ஸ்கள்
வாங்கவும் ஒரு கூட்டம் அனைவரையும் டேக்(TAG) செய்து பதிவுகளை பதிவு செய்து
வரும். அதனை தவிர்க்க முடியாமல் பலரும் அவதிபடுவார்கள். அதனை தவிர்க்கவும்
ஃபேஸ்புக்கில் வழி உள்ளது. ஃபேஸ்புக் ரிவியூ அமைப்பின் மூலம் உங்களை டேக்
செய்யும் பதிவுகளை நீங்கள் பார்த்து சரி என்று சொன்னால் மட்டுமே அது உங்கள்
டைம் லைனுக்கு வரும் இல்லையெனில் அவை உங்கள் டைம்லைனில் நிற்காது.
புகைப்படங்கள் மூலமாக தான் அதிகமாக பிரச்னைகள் வருகின்றன. அப்படி
புகைப்படங்களால் பிரச்னை வரும் போது நமது புகைப்படத்தை பதிவு செய்வதை
தவிர்க்கலாம். அப்படியே பதிவு செய்தாலும் உங்களுக்கும், உங்கள்
நண்பர்களுக்கு மட்டும் தெரியுமாறு அமைப்பை அமைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு
பிரச்னை தரக்கூடியவர்களுக்கு உங்கள் கணக்கு தெரியாதபடி அமைப்பை மாற்றி
கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நாமாக பாதுகாத்து கொள்ளும் ப்ரைவஸி விஷயங்கள் என்றாலும், நம்மை
அறியாமல் சில விஷயங்கள் நம் தகவல்களை திருடும். சில வைரஸ்கள்
உருவாக்கப்பட்டு உங்களது புகைப்படம் உள்ள வீடியோவை உங்கள் நண்பர்
அனுப்பியுள்ளார். என்ற செய்தி உங்கள் இன்பாக்ஸிற்கு வரும் அப்படி வரும்
போது அதனை அவசரபட்டு நம் நண்பர் அனுப்பிய வீடியோ தானே என்று க்ளிக்
செய்தால் அதே செய்தி உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள்
அனுப்பியது போன்று அனுப்பப்படும். இதில் சில சமயம் ஆபாச செய்திகளும்
வருகின்றன. இது உங்கள் தகவல்களை திருடும் நோக்கில் உருவாக்கப்படுபவை தான்.
சில ஆப்ஸ்களை ரன் செய்யும் போது உங்கள் கணக்கு தகவல்களை எடுத்து கொள்கிறேன்
என கேட்கும் அதனை நாம் படிக்க முடியாத அளவுக்கு சிறிய எழுத்தில்
கொடுத்திருப்பார்கள். அதனை நாம் படிக்காமல் ஆம் என கூறுவதாலும் நம்
ஃபேஸ்புக் பிரைவஸி பறிபோகிறது.
அனைவரும் ஃபேஸ்புக்கில் இனி லாக் இன் செய்து நம் நண்பர்களோடு அரட்டை
அடிப்பதற்கு முன் அதில் உள்ள அமைப்புகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்து
பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்வோம். குறிப்பாக பல பெண்கள் ஃபேஸ்புக்
பிரச்னையால் தவறான முடிவை எடுக்கும் நிலையிலிருந்து மீட்க ஃபேஸ்புக்கை
கொஞ்சம் கூர்ந்தும், எச்சரிக்கையுடனும் கவனிப்போம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...