கடந்தாண்டு மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் உட்பட நான்கு பள்ளிகளில் மாதிரி மாடித் தோட்டம் அமைக்கப்பட்டது. இந்தாண்டு மற்ற பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசும், மாநகராட்சியும் முன்வர வேண்டும்.
மதுரையில்
பல அரசு, மாநகராட்சி பள்ளிகளில் மைதானம் இல்லை. இச்சூழலில் மாணவர்களை
உற்சாகப்படுத்த மாடித் தோட்டம் அமைக்கலாம். முறை வைத்து, ஒவ்வொரு வகுப்பாக
தண்ணீர் ஊற்றச் செய்யலாம். காய்கறிகளின் வளர்ச்சியை தினமும் பார்ப்பதன்
மூலம் வீட்டிலும் காய்கறி செடிகள் வளர்க்க ஆசைப்படுவர்.
மாடித்
தோட்டம் அமைத்துள்ள, காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியை எழிலரசி கூறியதாவது: கடந்தாண்டு கத்தரி, வெண்டை, தக்காளி,
கொத்தவரை, அவரை, தக்காளி, பச்சை மிளகாய், அரைக்கீரை நட்டோம். கத்தரியில்
மட்டும் பத்து கிலோ வரை காய்கள் பறித்தோம். ஆறாம் வகுப்பு மாணவிகள்,
என்.எஸ்.எஸ்., மாணவிகள் மூலம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். காய்கள்
பறிப்பதும் மாணவிகள் தான்.
இயற்கையாகவே நெல்லை விளைவித்து பயிற்சி அளிக்கிறோம். விளையும் நெல்லை மாணவிகள் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். தற்போது தான் பள்ளி துவங்கியுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் விதைகள் வாங்கி மறுபடியும் தோட்டம் அமைப்போம் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...