சிறப்பு பயிற்று னர்களை, அரசு ஆசிரியர் களாக அறிவித்து பணி நியமனம்செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்காக உள்ளடங்கிய கல்வி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல்நேர பாதுகாப்பு மைய ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பயிற்றுனர்கள் சார்பில், பணிபாதுகாப்பு இன்மை, பணிச்சுமை போன்ற காரணங்களால் போராட்டம் அறிவிக்கப்பட்டது.பணி நிரந்தரம் செய்தல், மகப்பேறு விடுப்பு, அதிக பணிசுமையை குறைத்தல் உள்ளிட்ட ஆறு வகையான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.மாநில தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...