போடியில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் மாவட்டதலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாண்டிதுரை, பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை மே மாதத்தில் நடத்தாமல் ஜூன், ஜூலையில் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிர்வாக மாறுதல் என்ற பெயரில் கல்வி துறை உயர்அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களால் நிரப்பட்டு வருகிறது. கண்துடைப்பிற்காக சில நாட்களில் பள்ளி கல்விதுறையால் கலந்தாய்வு நடத்தப்படஉள்ளது. இதை நியாயமாக நடத்த வேண்டும்.
பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற புதிய நடைமுறையால் ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுப்பு அளித்து வருகின்றனர். கலந்தாய்வுக்கு முதல் நாள் இரவே, பாட வாரியாக, பள்ளி வாரியாக காலிப்பணியிட விபரங்களை கல்விதுறை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் விரோத போக்கை கடைபிடிக்கும் முதன்மை கல்வி அலுவலர் வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...