மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்களை
மட்டுமே அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன. 'பழைய மாணவர்களை பரிசீலிப்பது, வழக்கின் இறுதி உத்தரவைப்
பொறுத்து அமையும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன்
கபிலன் என்பவர் தாக்கல் செய்த மனு:இந்த ஆண்டு பிளஸ் 2 எழுதிய மாணவர்களுடன்
போட்டியிட கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. கடந்த
ஆண்டில், பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு, மருத்துவப் படிப்பில் 'கட் - ஆப்'
மதிப்பெண், 198.25. அதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 1,000
மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றனர்.
இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 'கட்-ஆப்' 194 எனஇருந்தால்
கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அந்த இடங்கள்
சென்றுவிடும்.எனவே இந்த ஆண்டில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே
மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த வேண்டும் என
தெரிவிக்கப்பட்டது. நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவு: கடந்த ஆண்டு மற்றும்
அதற்கு முந்தைய ஆண்டு மாணவர்களை பரிசீலிப்பது இந்த வழக்கின் இறுதி
முடிவுக்கு கட்டுப்பட்டது.விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளி
வைக்கப்படுகிறது.
Yes,hundred percent truth
ReplyDelete