'எம்.பி.பி.எஸ்., படிப்பை பதிவு செய்ய தேசிய தகுதித் தேர்வில் வெற்றி
பெற வேண்டும் என்ற நடைமுறை தேவையில்லாதது; மருத்துவ பல்கலை தேர்வு முறையை
கேலிக்கூத்தாக்கும் செயல்' என டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்கள் 'எக்சிட்'
தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பதிவு செய்து சிகிச்சை அளிக்க முடியும்
என்ற நடைமுறை இந்தியாவில் உள்ளது.
தற்போது 'உள்நாட்டில் படித்தாலும் தேசிய தகுதித்தேர்வில் வெற்றி
பெற்றால் மட்டுமே படிப்பை பதிவு செய்ய முடியும்: உயர் கல்விக்கும் செல்ல
முடியும்' என கிடுக்கிப்பிடி போடும் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு
வருகிறது. 'இதுதேவையில்லாத நடைமுறை' என டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.இந்திய மருத்துவர் சங்க தமிழக தலைவர் சுரேந்தரன்: அரசு
தனியார் மருத்துவ கல்லுாரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.
கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றியே தேர்வுகள்
நடத்தப்படுகின்றன.இதனால் ஏற்கனவே தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இந்த
சூழலில் எம்.பி. பி.எஸ்., படிப்பை பதிவு செய்ய 'எக்சிட்' எனும்
தகுதித்தேர்வு தேவையில்லாதது; மத்திய அரசு முடிவை கைவிட வேண்டும்.
இந்திய பொது சுகாதார சங்க தமிழக தலைவர் இளங்கோ: வெளிநாடுகளில்
எம்.பி.பி.எஸ்., முடித்து வருவோருக்கு கட்டாயம் தகுதித்தேர்வு வேண்டும்.
ஆனால் உள்நாட்டு
பல்கலையில் தேர்வு முறை கடினம்.பல நிலைகளைத் தாண்டியே எம்.பி.பி.எஸ்.,
முடித்து திறன் பெற்றவர்களாக வெளியே வருகின்றனர்.மூன்று மணி நேர தேர்வில்
அவர்களின் திறனை முடிவு செய்வது சரியான நடைமுறை அல்ல; அப்படி செய்வது
தேர்வு முறையை கேலிக்கூத்தாக்கும் செயல்; அதிக விமர்சனம் வரும்.
இதைவிட்டு மருத்துவ சேவையை விரிவுபடுத்துதல் கூடுதலாக கல்லுாரிகள்
மருத்துவமனைகள் உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.சமூக
சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்திரநாத்: எம்.சி.ஐ.
அங்கீகரித்த மருத்துவ கல்லுாரிகளில் தான் படிக்கின்றனர். மத்திய மாநில
அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகள் தேர்வை சந்தித்து வெளியே
வருகின்றனர்; மீண்டும் ஒரு தகுதித் தேர்வு அவசியமற்றது.
ஒரு தகுதித் தேர்வு மட்டுமே மருத்துவக் கல்வித்தரத்தை உயர்த்தி விட
முடியாது. மருத்துவ கல்லுாரிகளின் தரம் பாடத்திட்டம் பயிற்சி முறைகளில்
உள்ள குறைபாடுகளை களைதல் அனைத்து மருத்துவ பல்கலைகளிலும் ஒரே மாதிரியான
தேர்வு முறை கொண்டு வருவதும் பயன் அளிக்கும்.இவ்வாறு பல்வேறு டாக்டர்கள்
சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...