விரைவில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி
குழந்தைகளுக்கும், ஈஷா மையம் சார்பில், யோகா கற்றுத் தரப்படும், என, ஈஷா
யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார். சர்வதேச யோகா தினத்தையொட்டி,
சென்னையில், நேற்று, 25 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியை, மத்திய
அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்து பேசியதாவது:
177 நாடுகள்: பல்லாயிரம் ஆண்டுகளாக நம்
சாதுக்கள், குருமார்கள் சொல்லிக் கொடுத்து வந்ததை, இன்று, சத்குரு
அனைவருக்கும் வழங்கி வருகிறார். 177 நாடுகள் சர்வதேச யோகா தினத்திற்கு
ஆதரவு தெரிவித்துள்ளன. யோகா, உடலுக்கும், மனதிற்கும் சிறந்த பயிற்சி;
உடலிலும், மனதிலும் ஒழுக்கம் ஏற்படுகிறது.
நான் பங்கேற்பது அரசு நிகழ்ச்சியல்ல; ஈஷா
அமைப்பு சிறப்பாக கொண்டாடிய சர்வதேச யோகா தினம் இது. ஜக்கி வாசுதேவ்
மக்களுக்கு சொல்லித்தரும் விதம் என்னை வரவழைத்துள்ளது. எனக்கும்,
ஆர்.எஸ்.எஸ்., மூலம், முன்பே யோகா கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
கிடைத்தது.இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...