பள்ளி விடுதிகள் மற்றும் கேன்டீன்களில்
நுாடுல்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது
என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான
அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பலவற்றில்
கேன்டீன் உள்ளது. இவற்றில் மதிய நேர உடனடி உணவாக, மேகி நுாடுல்ஸ்
விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான உத்தரவு பள்ளிக்
கல்வித் துறை செயலகத்திலிருந்து பிறப்பிக்கப்படும்.
அதற்கு முன் தாங்களாகவே கேன்டீன்களில் தடை
செய்யப்பட்ட பொருட்களை நிறுத்திக் கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு அந்தந்த
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள்
அறிவுறுத்தியுள்ளனர், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...