ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்,
ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மே மாதம் கவுன்சிலிங் நடந்தால், ஜூன் மாதத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர
வசதியாக இருக்கும். ஆனால், ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படுவதால்,
ஆசிரியர்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்
குடும்பத்துக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
எனவே, வரும் ஆண்டுகளில் மே மாதமே, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று
கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆசிரியர் கூட்டணியின் நகர செயலாளர் விக்டர்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக மே மாதத்தில் கவுன்சிலிங் நடைபெறவில்லை. இனி வரும் காலங்களிலாவது நடைபெறும் என நம்புவோம்.
ReplyDelete