இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
அமெரிக்கா,
கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து
நாடுகளுக்கும் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் வரும் 31-03-2016
வரை கூடுதலாக 23 கிலோ வரை பொருட்களை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கொண்டு
செல்லலாம் என இன்று வெளியாகியுள்ள பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்
செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
டெல்லி,
மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னையில் இருந்து மேற்கண்ட
நாடுகளின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் இந்திய மாணவ-மாணவியருக்கு இந்த
சிறப்பு சலுகை பொருந்தும் என இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர்வரை, ‘செக்-இன் லக்கேஜ்’ ஆக வெறும் 23 கிலோ பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர்வரை, ‘செக்-இன் லக்கேஜ்’ ஆக வெறும் 23 கிலோ பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...