உடுமலையில், ஆங்கில வழி கல்வி துவங்கும் அரசு
பள்ளி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், மாணவர் எண்ணிக்கை
குறைந்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 120 துவக்கமற்றும்
நடுநிலைப்பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, 2013ல், ஒன்றியத்தில் உள்ள, 11 பள்ளிகளில்
ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளில்
குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டியதால், கடந்தாண்டு கூடுதலாக ஏழு
பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டன.
தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடிச்செல்வதை
கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மேலும் ஐந்து பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி
அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வகையில், உடுமலை பகுதியில் தற்போது, 23 அரசு
பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் உள்ளன.
எனினும், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது,
நடப்பாண்டில் ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, 10
சதவீதம் வரை சரிந்துள்ளது. பல பள்ளிகளில், ஆங்கில வகுப்பு பெயரளவுக்கே
உள்ளதாக, பெற்றோர் கூறு கின்றனர்.
முழுமையான ஆங்கில பயிற்சி இல்லாத ஆசிரியர்களை
கொண்டு கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற
காரணங்களால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை சரிந்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில்
ஆங்கில வகுப்பு இருந்தால், ஆர் வத்துடன் பெற்றோர் சேர்க் கின்றனர். மாணவர்
எண்ணிக் கைக்கேற்ப, கூடுதல் வகுப்பு ஏற்படுத்த, கல்வித்துறை
அறிவுறுத்துகிறது. ஆனால், அதற்கேற்ற வசதிகளையும் செய்து தர வேண்டும்.
மாணவர் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பினும்,
அவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, ஆங்கில வழி கல்வி வகுப்புகளை
தொடர்ந்து நடத்துகிறோம். இதை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலமே,
மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை முழுமையாக அளிக்க முடியும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...