பொறியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய பொறியியல் பட்டதாரிகள் 10 மாதங்களாக
காத்திருக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக் குடியை சேர்ந்தவர்
சதீஷ்குமார். பொறியியல் பட்டதாரியான இவர் ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியை
தொடர்புகொண்டு ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசுப் பணிக்கு
பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடந்த 23.4.2014-ம் தேதிஅறிவிப்பு
வெளியிடப்பட்டது. இதன்படி பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு,
பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவு மற்றும் தொழில் பாதுகாப்புத்துறை
ஆகியவற்றில் மொத்தம் 98 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கான எழுத்துத் தேர்வு 27.7.2014-ம் தேதி
நடைபெற்றது. 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் அந்த தேர்வுக்கான
முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால், அதற்கு 5 மாதங்களுக்குப் பிறகு
(டிசம்பரில்) நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு,
தேர்வானவர் களுக்கு பணியிடம் ஒதுக்கும் கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்
டிருக்கிறது. இத்தனைக்கும் உதவிப் பொறியாளர் பணிக்கு வெறுமனே 54 ஆயிரம்
பேர்தான் தேர்வெழுதினோம். பல லட்சம் பேர் தேர்வெழுதிய குரூப் 4 தேர்வு
முடிவுகள் விரைவில் வெளியாகிவிட்ட நிலையில், குறை வான நபர்கள் தேர்வெழுதிய
பொறியாளர்பணிக்கான முடிவு களை வெளியிடாமல் இருப்பது வருத்தமளிக்கிறது
.டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் குறித்து 18004251002 என்ற இலவச தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம் என்று அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் கூறப் பட்டுள்ளது. ஆனால் அந்த எண்ணும் இயங்கவில்லை. எனவே, இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஓய்வுபெற்ற பேராசி ரியர் ஒருவர் கூறியபோது, “மற்ற அரசுப் பணிக்கான தேர்வுகளைப்போல இல்லாமல், பொதுப்பணித்துறை பொறியாளர் பணிக்கான தேர்வில் அரசியல் தலையீடு இருப்பதாகக்கூறப்படுகிறது. முன்பு இதே பணிக்கான தேர்வு நடத்தப்பட்டபோது, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டது.
ஒரு தேர்வுக்கு 3 முறை முடிவுகளை வெளியிட்டனர். இந்த முறையும் அவ்வாறு நடந்தால், தேர் வாணையம் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்” என்றார். இதுகுறித்து தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி சோபனாவிடம் கேட்டபோது, “வெகுவிரையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரு கின்றன” என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...