வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்த்து
அவர் களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக அனைத்து வங்கிகளிலும் குறை
தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் இந்த குறைதீர்ப்பாயம் செயல்படத் தொடங்கும் என தகவல்
வெளியாகியுள்ளது.
பணப்பரிவர்த்தனை, கடன்கள் பெறுதல் மற்றும்
திருப்பிச் செலுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள், கிரெடிட், டெபிட்
கார்டுகள் பயன்படுத்துதலில் சேவை குறைபாடுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள்
வருகின்றன.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர்களிடம்
புகார் தெரிவித்தாலும் அவற்றின் மீது அவர்கள் உரிய நடவடிக்கை
எடுப்பதில்லை. இதனால், வாடிக் கையாளர்கள் பாதிப்படைகின்றனர்.
சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி குறைதீர்ப்பாய அலுவலக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘வங்கி சேவையில் ஏதேனும் குறைபாடுகள்,
பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுகுறித்து வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட
வங்கியின் கிளை மேலாளர், மண்டல மேலாளர் உள்ளிட்டோரிடம் புகார்
தெரிவிக்கலாம். அவர்கள் ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத்
தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்கள் வங்கி
குறைதீர்ப்பாயத்தில் புகார் அளிக்கலாம்.
தற்போது இந்த வங்கி குறைதீர்ப்பாயம் ரிசர்வ்
வங்கியில் மட்டுமே செயல்படுவதால் அனைத்துப் புகார்களும் இங்கு வந்து
குவிகின்றன. இதனால், இங்குள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதன்
காரணமாக வாடிக்கை யாளர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண முடியாத
நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விதமாக
வங்கி களுக்குள்ளேயே குறைதீர்ப் பாயத்தை அமைக்க ரிசர்வ் வங்கி
உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பொதுத்துறை, தனி யார் மற்றும்
வெளிநாட்டு வங்கிகளில் இத்தீர்ப்பாயம் அமைக்கப்படும். இந்த அதிகாரி கள்
பெரும்பாலும் வங்கிகளுக் குத் தொடர்பில்லா பிற துறை களில் இருந்து ஓய்வு
பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். வரும் ஜூலை மாதம் முதல் இக்குறை
தீர்ப்பாயம் செயல்படத் தொடங் கும் என தெரிகிறது.’’ இவ்வாறு அந்த அதிகாரி
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...