அனைத்து
தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக்
குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை
உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரும்,
பா.ம.க., பிரமுகருமான, ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:மெட்ரிக்குலேஷன்
பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது என, அறிவிக்க வேண்டும். சென்னை
மற்றும் மதுரைபல்கலைகழகங்களால்,
1976 ஜூன், 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை
தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய
வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, 2011ல், தாக்கல்
செய்யப்பட்டது. இதற்கு, கல்வி துறை சார்பில், பதில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று, விசாரணைக்கு
வந்தது.
தனி விதிமுறைகள்
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.பாலு, அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகினர். பள்ளி கல்வி துறை சார்பில், இணைச் செயலர் அழகேசன் தாக்கல் செய்த, கூடுதல் பதில் மனு:
ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு என, தனியாக விதிமுறைகள் உள்ளன.இதர பள்ளிகள், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், நிர்வகிக்கப்படுகின்றன.கடந்த, 1973ல் கொண்டு வரப்பட்ட, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், சட்டப்பூர்வமானது; அனைத்து தனியார் மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான விதிமுறைகள், சட்டப்பூர்வமற்றவை.இவற்றுக்கென ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்தச் சட்டம், சமச்சீர் கல்வி சட்டம் மற்றும் இலவச, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகளை எதிர்த்து, பல ஆண்டுகளுக்கு பின், மனுதாரர், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உயர்மட்டக்குழு அமைக்க...
நீண்ட கால தாமதத்துக்கு, அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகளை பின்பற்றுவதால், மனுதாரரோ, மற்றவர்களோ எப்படி பாதிக்கப்படுகின்றனர் என கூறவில்லை. எனவே, மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஒருங்கிணைந்த சட்டம் வகுக்க, உயர் மட்டக் குழுவை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பள்ளி கல்வி
துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு, எவ்வளவு கால அவகாசம் ஆகும் என்பதை, நாளை தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். எனவே, விசாரணை, 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தர விட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...