காஷ்மீர் மாணவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஏஐஐஎம்எஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு -
காஷ்மீர் மாநிலம் டிரால் மாவட்டம் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம்
இருப்பதற்கு பெயர் போனது. இந்த டிரால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹித் நபி.
இவரது தந்தை விவசாயி, தாய் இல்லத்தரசி. கடுமையான போராட்டங்களுக்கு இடையே
மாணவர் ஷாஹித் நபி இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "எனது
லட்சியத்தில் நான் எப்போதுமே உறுதியுடன் இருந்தேன். அதனால், எனது
லட்சியத்தை அடைவதில் எனக்கு சிக்கல் இருக்கவில்லை. எனது கிராமத்தில்
எப்போதுமே ஒருவிதமான பதற்றமான சூழலே நிலவும். இருப்பினும் எனது முழு
கவனமும் படிப்பின் மீதே இருந்தது. இதன் காரணமாகவே என்னால் ஜம்மு-காஷ்மீர்
மாநில மருத்துவ பொது நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற முடிந்தது.
அதேபோல்,
ஏஐஐஎம்எஸ் மருத்துவ நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற முடிந்தது. இருப்பினும்
ஏஐஐஎம்எஸ் மையத்தில் இணைந்து படிக்க வேண்டும் என்பது எனது கனவு. எனவே நான்
அதில் சேருவேன்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...