Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங்:இன்று முதல் அமல்

         பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங் இன்று முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து கடந்த 2ம் தேதி மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நுகர்வோரின் தீவிரமான பிரச்னையாக கருதப்படும் "பாதியிலேயே அழைப்பு துண்டிக்கப்படும்' (கால் டிராப்) விவகாரத்துக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
 
           இதன் ஒரு கட்டமாக  , கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 செல்லிடப்பேசி கோபுர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக டிராய் நிறுவனத்திடமும் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம்) ஆலோசனை நடத்தப்படும்.இதன் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையச் சமநிலை விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையை தொலைதொடர்புக் குழு அண்மையில் சமர்ப்பித்துள்ளது. இன்னும் சில தினங்களில் அந்த அறிக்கை, தொலைதொடர்புத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
            மேலும் பிஎஸ்என்எல் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 15ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். அதன் படி இன்று முதல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப்பகுதியில் இருந்து பேசினாலும் ஒரேகட்டணம்தான் வசூலிக்கப்படவுள்ளது. அழைப்பு பெறுவதற்கும் இனி கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive