பத்தாம்
வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித் தேர்வர்கள் பதிவு
செய்வதற்கான அறிவுறுத்தலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது.
செய்முறை
பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத தனித் தேர்வர்கள் 2015-16 பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
2015-16 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தனித் தேர்வர்கள், முன்னதாக செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும்.
இதில் பங்கேற்க ஜூன் மாத இறுதிக்குள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெயரை தனித் தேர்வர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வர்கள் புதன்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
அதன் பிறகு, மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 நாள் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2015-2016 பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தனித் தேர்வர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பத்தை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...