தாராபுரம் அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி
போதிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தங்களது சொந்த
செலவில் செய்து வருகின்றனர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி
ஒன்றியத்திற்குள்பட்ட நல்லிமடம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரசு
உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளி கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக
தரம் உயர்த்தப்பட்ட பின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100
சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.
இந்தாண்டு இப்பள்ளி மாணவி ஜி.தாரணி 482 மதிப்பெண்கள் பெற்று
முதலிடத்தையும், மாணவி எஸ்.பாரதிபிரியா 478 மதிப்பெண்கள் பெற்று
இரண்டாமிடத்தையும், மாணவி கே.சங்கமித்ரா 471 மதிப்பெண்கள் பெற்று
மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் இப்பள்ளி தாராபுரம் வட்டார அளவில் இரண்டாமிடத்தையும், குண்டடம்
ஒன்றிய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு நெருங்கும்
நேரத்தில் 3 மாதத்திற்கு அனைத்து மாணவ, மாணவியரும் பள்ளியிலேயே தங்க
வைக்கப்பட்டு இரவு நேர படிப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் தங்கும்
அனைவருக்கும் இரவு நேர உணவு, உள்ளூர் பிரமுகர்களின் சார்பில் இலவசமாக வழங்க
ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாணவர்களை கண்காணிக்க தினம் ஒரு ஆசிரியர் வீதம் பணிக்கு நியமிக்கப்படுவர்.
இதேபோல், பேருந்து வசதியில்லாததால் இரவு வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு
சரிவர இயலாத நிலை ஏற்பட்டது.
அப்போது தாராபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் பாலகிருஷ்ணன்
தனக்கு சொந்தமான வேனை பள்ளிக்கு இலவசமாக அளித்து மாணவர்களை அழைத்துவர
ஏற்பாடு செய்தார். வேனுக்கு ஆகும் டீசல் செலவை பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்
இணைந்து பங்கிட்டு கொண்டனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் தர்மர் என்பவர்
பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோருக்கு இருசக்கர
வாகனம் தனது சொந்த செலவில் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார். தற்போது
தேர்வு முடிவு வெளியான நிலையில் மாவட்ட அளவில் மாணவிகள் இடம் பெறாததால்
தனது ஊதியத்தின் பாதி தொகையான ரூ. 15 ஆயிரத்தை முதலிடம் பெற்ற மாணவிக்கு
ரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு ரூ. 5 ஆயிரம் என பகிர்ந்து
வழங்கியுள்ளார். இவரின் செயல்பாட்டை கண்ட இப்பள்ளியின் சமூக அறிவியல்
ஆசிரியை ஆர்.விஜயபாலலட்சுமி, ஆசிரியர் தர்மர் வழங்கிய பரிசுத் தொகை போல்
தானும் மாணவிகளுக்கு வழங்கியுள்ளார்.
இதுதவிர ஆசிரியர் தர்மர், இப்பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்து
தொழிற்பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ,
மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி இதுவரை
50-க்கும் மேற்பட்டோரை படிக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் தர்மர் கூறியது:
மிகவும் வறுமையான சூழ்நிலையில் அரசுப் பள்ளியிலேயே படித்து இன்று
ஆசிரியராக உள்ளேன். அதனால் அரசுப் பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவ,
மாணவியருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
எனது இரு குழந்தைகளையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்துள்ளேன். அரசுப்
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள்
தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும் என்றார்.
இப்பள்ளி ஆசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteCONGRATULATIONS - BY GHS BELLAMPATTI TEACHERS
ReplyDeleteGreat sir.
ReplyDeleteSimply superb.. Hearty congratulations..
ReplyDeleteGreat Sir
ReplyDeleteVaazhthukkal...
ReplyDeleteVazhthukkal sir!.
ReplyDeleteVery nice 😊 Congratulations teachers
ReplyDeleteSuper
Deleteஅவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை ..வாழ்த்துக்கள்...இவர்களது இந்த பணி தொடரவேண்டும்...
ReplyDeletevery nice
ReplyDelete