Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பேஸ்புக்கில் ஆபாச வீடியோவை பரப்பும் வைரஸ்…. எச்சரிக்கை ரிப்போர்ட்…

         சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது.இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சமூக வலைதளபயன்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வலைதள பயன்பாட்டாளர்கள் கூறுகையில் ,
        ஆபாச ரீதியான விஷயங்கள் பரவுவதன் காரணமாக, பேஸ்புக் அக்கவுண்ட்டை பயன்படுத்தவே பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.ஆக்ரா சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி நிதின் கஸானா இந்த வைரஸ் குறித்து குறிப்பிடுகையில்,:
இந்த வைரஸ் கிலிம் மால்வேர் பிரிவைச் சேர்ந்தவை. இந்த வகையானவைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.இந்த வைரஸ் மெசேஜ்வடிவில் பரவுகிறது.
எப்படி என்றால் 'watch urgent, because it is your video'," என்று மெசேஜ் வரும் இதனை யார் கிளிக் செய்கிறார்களோ, அவர்களின் இன்பாக்ஸ்க்கு ஸ்பேமாக ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வரும், இதுஅவர்களின் நண்பர்கள் வட்டத்திற்கு, நாமே அனுப்புவது போன்று ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பும் என்றார்.மேலும் அவர், இந்த வைரஸ் குறித்து கூறுகையில், ow.ly என்ற சார்ட் லிங்க் மூலம் இந்த மெசேஜ் பரவும். எனவே டெஸ்க்டாப் மற்றும் மொபைல் போன் மூலம் பேஸ்புக்பயன்படுத்துபவர்கள் சரியான இணையதள லிங்க்கா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டும். மொபைல் பயன்பாட்டாளர்களுக்கும், டெஸ்க்டாப் பயன்பாட்டாளர்களும் இந்த வைரஸ் பல்வேறு ஆஃபர்களை வழங்கும், இறுதியில் இதனை டவுன்லோட் செய்ய விருப்பமா? என்று கேட்கும்.இறுதியால் ஆபாசங்களை பல்வேறு வடிவில் அனுப்பும். இதன்பின்னர் நமது இன்பாக்சில் இருந்து நமது சுற்றுவட்டத்தில் நண்பர்களாக உள்ளவர்களுக்கு ஆபாசங்களை பல்வேறு வடிவில் அனுப்பும் என்று எச்சரிக்கை விடுத்தார் காவல் அதிகாரி கஸானா.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive