ஞாயிற்றுக் கிழமை
ஒருவர்,
ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு, செல்வச் செழிப்பு/விருத்தியுடன்,
செல்வாக்கு விருத்தியும் பெறுவர். மேலும் அவர் தமது நடுப்பகுதி வாழ்க்கை,
மத்திய வயதில் (40-45வயதிற்கு மேல்)மிகுந்த பேரும் புகழுடன் சந்தோஷகரமான
வாழ்க்கை அடையப் பெற்றிருப்பர்.
திங்கள் கிழமை
திங்கள் கிழமை அன்று
ஜனனமானவர்க்கு, செல்வாக்கு, பேரும் புகழும் பெற்று, அனைவராலும்
மதிக்கத்தக்கதோர் வாழ்க்கை வாழ்தல், இவர்கள் மாலை நேரங்களில் செய்கின்ற
முயற்சிகளில் அனைத்தும் வெற்றி கிட்டும்.
இந்த கிழமைக்குரிய கிரகம்: சந்திரன்
செவ்வாய் கிழமை
செவ்வாய்க் கிழமை
அன்று ஜனனமானவருக்கு, தமது கடுமையான உழைப்பினால் முன்னேற்றமடைந்து
குறிப்பிட்ட இலக்கை அடைதல், உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும்
போற்றப்படுவர்.
இந்த கிழமைக்குரிய கிரகம்:செவ்வாய்
புதன் கிழமை
புதன் கிழமையன்று
ஜனனமானவர்க்கு, ஏதேனும் ஒரு துறையில் சிறப்பான கலைஞராகத் திகழ்தல், சிறந்த
கல்வி, கேள்வி, ஞானம் பட்டப் படிப்புப் பெற்று உயர்ந்த பதவியை அடையப்
பெறுவர்.
இந்த கிழமைக்குரிய கிரகம்: புதன்
வியாழக் கிழமை
வியாழக் கிழமை அன்று
ஜனனமானவர்க்கு, மற்றவருக்குப் போதிக்கக் கூடிய தகுதி பெறுவர். மேலும் இவர்
மற்றவருக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை மேற்கொள்பவராக அடையப்பெறுவர்.
இந்த கிழமைக்குரிய கிரகம்: குருபகவான்
வெள்ளிக் கிழமை
வெள்ளிக்கிழமை அன்று
ஜனனமானவர்க்கு, சடங்கு, சம்பிரதாயங்களில் பூர்ண நம்பிக்கை கொண்டிருப்பர்.
அனைவராலும் போற்றுகின்ற வகையில் ஆன்மீகப் பணியில் அதிக ஈடுபாடு உள்ளவராக
இருப்பர்.
இந்த கிழமைக்குரிய கிரகம்: சுக்கிரன்
சனிக்கிழமை
சனிக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு அதிகமாக சமயோசித புத்தி பெற்றிருத்தல், சிறந்த தந்திரசாலித் தன்மை ஆகியவை அடையப்பெற்றிருப்பர்.
இந்த கிழமைக்குரிய கிரகம்: சனிபகவான்
பொதுவாக ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒவ்வொரு குழந்தை ஜனனம் ஆகும் போது, அக்குழந்தை எந்த நட்சத்திரத்தில் ஜனனமாகிறதோ, அதற்கேற்ற நிலையில் ஜனனமாகும் என்பது ஜாதக ரீதியான நம்பிக்கை.
இதன்படி ஒருவர், ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனனமாகும் குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தைகள் மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.
அவ்வாறே ஒருவர்
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம்,
பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனனமாகும் குழந்தைகள் பூமியை நோக்கியவாறு
வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தைகள் கீழ்நோக்கு நட்சத்திரத்தில்
ஜனனமாகும்.
மேலும் ஒருவர்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,
கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனனமாகும் குழந்தைகள், ஒருக்களித்த
நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும்
என்பதாகும். ஆகவே இக்குழந்தைகள் சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.
கைரேகையின் சிறப்புக்கள்:
ஆன்றோர், சான்றோர்,
பெரியோர்கள் ஜோதிட சாஸ்திரம், எண்கணித சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம்
ஆகியவைகளில் கைரேகை சாஸ்திரமே சாலச்சிறந்ததாகும். ஒருவர் ஜனன நேரம் சிறிது
மாறுபட்டாலும், ராசி, லக்னம் மாறுபடும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.
ஆகவே ஒருவரின், சிறப்புப் பலன்களை, ஜாதகம் மூலம் கணிப்பதைவிட, கைரேகை மூலம்
கணிப்பது மிகவும் சாலச்சிறந்ததாகும்.
அன்றாட வாழ்க்கையில்
ஒருவரின், நன்மைகள், தீமைகள், பாதிப்புகள் ஆகியவை பூமியின் அசைவிற்கும்
கிரகங்களின் அமைப்பு தன்மைகளுக்கு ஏற்றார் போல் பலன்களை அடையப் பெறுவர்
என்பதாகும்.
ஒருவரின் ஜனன
ஜாதகத்தில் உள்ள வலுப்பெற்ற கிரகங்களின் அமைப்பு தன்மைக்கு ஏற்றவாறு பெயர்
மாற்றம் அல்லது பெயர் எழுத்துக்களில் மாற்றம் செய்வதின் மூலம், செல்வச்
செழிப்பு, செல்வாக்கு, பேரும், புகழும் பெற்று அமோக வெற்றிகரமான வாழ்க்கை
அடையப்பெறுவர்.
- ஜோதிடர் ஏ.கே.ஆறுமுகம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...