தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, ௨௦௧௫ - ௧௬ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்.சி.,(விவசாயம்) உள்ளிட்ட, 13வகையான பட்டப்படிப்புகளுக்கு, கடந்த மே, 15ம் தேதி முதல், இம்மாதம், 13ம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் உள்ள, 2,3௦௦ இடங்களுக்கு, 29 ஆயிரத்து, 942 பேர் விண்ணப்பித்தனர்.விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இன்று காலை, 1௦:௦௦ மணிக்கு பல்கலை துணைவேந்தர் ராமசாமி வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுகிறார். விண்ணப்பதாரர்கள், www.tnau.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து, வரும், ௨௯ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...