தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
விற்பனையிலுள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உற்பத்தி நிறுவனம் திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி, குஜராத், உத்தரகண்ட், காஷ்மீரைத் தொடர்ந்து தமிழகத்திலும் மேகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் தான் இதற்கு முழு பொறுப்பே தவிர கூலிக்கு மாரடிப்பவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் ஆனால் அவர்கள் தங்களை நம்பியவர்களுக்கு நம்பிக்கை துரோகிகள்...சுகாதாரத்துறை ஆய்வு செய்யாமல் என்ன செய்தது? எவ்வாறு அனுமதி வழங்கியது ? இதனை உண்ட குழந்தைகளின் நிலை என்ன? இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது தரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் சுகாதார துறையும்..போயும் போயும் குழந்தைகளின் வயிற்றிலையா அடிப்பிங்க பாவிகளா..
ReplyDelete